
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
கடைசியாக நடந்து முடிந்த 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் டிராபியும், ரூ.50 லட்சம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. பிரியங்கா இரண்டாம் இடம் பிடித்தார். டைட்டில் ஜெயித்த ராஜுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதுதவிர விஜய் டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பாணியாற்றி உள்ளார் ராஜு. கடைசியாக இவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. மக்களின் மனங்களை வென்ற போட்டியாளராக இருந்ததோடு மட்டுமின்றி டைட்டில் வென்றும் அசத்தினார். பிக் பாஸ் வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக பேட்டியளித்துள்ள ராஜு தன்னை தேடி எக்கச்சக்க வாய்ப்புகள் வாயில் தட்டுவதாக கூறியுள்ளார். அதோடு பரிசு தொகை வைத்து மனைவிக்கு என்ன வாங்கி தருவீர்கள் என கேட்டதற்கு மொத்த பணத்தையும் அவளுக்கு தான் தருவேன் என்றும் இதுவரை எதுவுமே என்னிடம் எதிர்பார்க்காத தன்மனைவியை இனி வெற்றி பணத்தை வைத்து மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார் ராஜு..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.