பேய் கதைக்கு ரெஸ்ட் விட்டு ரொமாண்டிக் ஹீரோவாக களமிறங்கும் லாரன்ஸ் - டைரக்டர் யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

Ganesh A   | Asianet News
Published : Jan 20, 2022, 08:46 AM IST
பேய் கதைக்கு ரெஸ்ட் விட்டு ரொமாண்டிக் ஹீரோவாக களமிறங்கும் லாரன்ஸ் - டைரக்டர் யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

சுருக்கம்

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் லாரன்ஸ், துர்கா, அதிகாரம், சந்திரமுகி 2, ருத்ரன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் திகில் ப்ளஸ் காமெடி சப்ஜெக்டை வைத்து வெற்றிக்கொடி கட்டியவர் ராகவா லாரன்ஸ். அவர் இயக்கி நடித்த,  ‘முனி', 'முனி 2: காஞ்சனா', 'காஞ்சனா 2' மற்றும் 'காஞ்சனா 3' ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானவை. இதில் 'முனி 2: காஞ்சனா' திரைப்படம் 'லட்சுமி' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமானார் லாரன்ஸ்.

தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படம் தயாராகி வருகிறது. 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து, இயக்கும் இப்படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதுதவிர துர்கா, அதிகாரம், சந்திரமுகி 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் லாரன்ஸ்.

இதில் துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்குகின்றனர். இப்படம் மூலம் அவர்கள் இருவரும் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கின்றனர். அதேபோல் அதிகாரம் படத்தை எதிர்நீச்சல், காக்கிசட்டை, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதுதவிர பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் லாரன்ஸ்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம்வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்‌ஷன் கலந்த ரொமாண்டிக் படமாக உருவாக உள்ள இதில் நடிகர் லாரன்ஸ் ஸ்டைலிஷ் லுக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!