
படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பதையும் தாண்டி பணத்தை காட்டி நடிகைகளை மடக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையிடம் தயாரிப்பாளர் ஒருவர் பேரம் பேசியது திரையுலகில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடடா! இப்பவே கல்யாண கலை வந்துடுச்சே.... பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்தீங்களா???
பாலிவுட்டின் ஐயிட்டம் டான்சாராக வலம் வந்து தற்போது ஹீரோயின் அளவிற்கு உயர்ந்திருப்பவர் மந்தனா கரீமி ராய். தற்போது மந்தனா மற்றும் சன்னி லியோன் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்துள்ள கோலா கோலா படம் விரைவில் வெளியாக உள்ளது. இவர் கடந்த இந்தி பிக்பாஸ் சீசனிலும் பங்கேற்று புகழ் பெற்றவர். கோலா கோலா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் மகேந்திர தரிலால் தன்னிடம் தவறாக முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாம் மூக்குத்தி அம்மனால் வந்த வினை... பிரபல நடிகைகளுக்குள் தீயாய் பரவும் சேலஞ்ச்... வைரல் போட்டோஸ்...!
2 மணிநேரம் ஒத்துழைத்தால் 2 லட்சம் பணம் சேர்த்து தருவதாக படப்பிடிப்பின் கடைசி நாள் கேரவனுக்குள் வந்து பேசிக்கொண்டே தன்னிடம் அது மீறியதாக மந்தனா கரிமி ராய் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் பிரபல இயக்குநரான அனுராக் கஷ்யாப் மீது பிரபல நடிகையான பாயல் கோஷ் பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.