Bigg boss Aamir dance: 'அரபிக் குத்து' பாட்டுக்கு பிக் பாஸ் அமீர் அலைனாவுடன் போட்ட குத்தாட்டம்...வைரல் வீடியோ!

Anija Kannan   | Asianet News
Published : Mar 14, 2022, 11:16 AM IST
Bigg boss Aamir dance: 'அரபிக் குத்து' பாட்டுக்கு பிக் பாஸ் அமீர் அலைனாவுடன் போட்ட குத்தாட்டம்...வைரல் வீடியோ!

சுருக்கம்

Aamir dance: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு, டான்ஸ் மாஸ்டர் அமீர், அலைனாவுடன் சேர்ந்து போட்ட வெறித்தனமான குத்தாட்டம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு, டான்ஸ் மாஸ்டர் அமீர், அலைனாவுடன் சேர்ந்து போட்ட வெறித்தனமான குத்தாட்டம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

 தமிழில் பிக் பாஸ் நிகச்சி கடந்த 5 சீசன்களை கடந்து, தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டாக வெற்றிகரமாக ஓ-டி-டியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

 

 பிக் பாஸ் 5ல் டான்ஸ் மாஸ்டர் அமீர்:

கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜய் டிவியில், 16 போட்டியாளர்ளுடன் துவங்கிய, பிக் பாஸ் 5ல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம், உள்ளே நுழைந்து  Ticket To Finale  டாஸ்க் மூலம், முதல் ஆளாக பிக் பாஸ் இறுதி போட்டிக்கு சென்றவர் டான்ஸ் மாஸ்டர் அமீர் ஆவார். 

அமீர், பாவினியுடன் காதல்:

இவர்  பிக் பாஸ் வீட்டிற்கு வந்தவுடன் போட்டியார்களில் ஒருவரான பாவினியுடன் காதல் மலர்ந்தது.  பிக்பாஸ் 5-வது சீசனில் அதிக சர்ச்சைகளை சந்தித்ததுபாவினி தான். முதலில், அபிநய் உடனான காதல் விவகாரம், அமீர் உடன் முத்த சர்ச்சை என இருவருக்கும் காதல் மழை நீண்டு கொண்டே சென்றது. 

மேலும் படிக்க...Actress Manjima Mohan : தமிழ் நடிகருடன் காதல் திருமணமா? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த மஞ்சிமா மோகன்

நிகழ்ச்சிக்கு பிறகும் தொடர்ந்த காதல்:

நிகழ்ச்சியில்  இருந்து இருவரும் வெளியே வந்த பின்னரும், பாவினி மற்றும் அமீர் ஆகியோர் சேர்ந்து ஆல்பம் பாடல் வெளியிட்டிருந்தனர். இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். இவர்களது ஜோடிகளை பார்த்து, நெட்டிசன்கள் பொருத்தமான ஜோடி வென்று கமெண்ட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அரபிக் குத்து பாடல்: 

இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் கடந்த மாதம்  Youtubeல் வெளிவந்து  பல சாதனைகளை படைத்து வருகிறது.

இதுவரை சுமார் 150 மில்லியன்களை கடந்து பார்வையாளர்களை பெற்று  உலகமெங்கும் அரபிக் குத்து பாடல் வைரல் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் ரீலிஸ் செய்து வருகின்றனர். 

அமீர் மற்றும் அலைனா:
 
அந்த வரிசையில் தற்போது, அமீர் மற்றும் அலைனா இருவரும் வெறித்தனமாக அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இவை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!