
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் மற்ற சீசன்களை விட இந்த சீசனுக்கு குறைவான ரசிகர்கள் மட்டுமே உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பல டாஸ்குகளை வைத்து மேனேஜ் செய்து வருகிறது பிக் பாஸ் நிர்வாகம்.
கடந்த வாரம் அபிஷேக் வெளியேற இந்த வாரம் அரசியல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் மூலமும் போட்டியாளர்களுக்கு மார்க் வழங்கப்பட்டது. இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சிபி (Ciby), தாமரை (Thamarai), நிரூப் (Niroop), அபிநய் (Abinay), அக்ஷரா (Akshara), இமான் அண்ணாச்சி (Imaan Annachi), அமீர் (Ameer) ஆகிய பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களில் நிரூப் தன்னிடம் உள்ள காயினை வைத்து, சஞ்சீவை நாமினேட் செய்தார். ஆனால் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் அவர் தோற்றதால், அவர் பெயர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து நீக்கப்படவில்லை.மேலும் இந்த முறை குறைந்த வாக்குகளுடன், அபிநய் அல்லது நிரூப் ஆகிய இருவரில் ஒருவரோ... அல்லது இரண்டு எலிமினேஷன் இருக்கும் பச்சத்தில் இருவரும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பது தான் செம்ம ட்விஸ்ட். அதாவது இந்த வாரம், மிக குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இமான் அண்ணாச்சி வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோவையே பின்னுக்கு தள்ளியுள்ளது சன்டிவி சீரியல். முன்னதாக, எட்டு மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த 'பூவே உனக்காக' விஜய் டிவி-க்கு போட்டியாக10 மணிக்கு மாற்றி பிக் பாஸ் நேரத்தில் ஒளிபரப்ப தொடங்கியது. இந்த சீரியல் தற்போது அதிக பார்வையாளர்களை பெற்று பிக் பாஸ் ரேட்டிங்கை பின்னுக்கு தள்ளியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.