HBD Rajini kanth : பிறந்தநாள் காணும் ரஜினி : மயங்கி விழுந்த ரஜினி ரசிகர்...

Kanmani P   | Asianet News
Published : Dec 12, 2021, 01:51 PM IST
HBD Rajini kanth  : பிறந்தநாள் காணும் ரஜினி : மயங்கி விழுந்த ரஜினி ரசிகர்...

சுருக்கம்

HBD Rajini kanth : பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு வாழ்த்துக்கூற குவிந்த ரசிகர்களில்  ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் சிறுது நேரம் அந்த இடத்தில் பதட்டம் நிலவியுள்ளது. 

72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு ரசிகர்கள் திரைபிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ரஜினி பிறந்த நாளுக்காக #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது 72-வது பிறந்த நாளில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நல்ல திட்டத்தை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், கமல் உள்ளிட்டோர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே ஏழை - எளிய குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார். இதற்காக Rajinikanth Foundations என்ற பயிற்சி அமைப்பை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார். இத்திட்டம் வழக்கறிஞர் எம் சத்திய குமாரால் நிர்வகிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல அவரது வீட்டின் முன் நுற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அஅவ்வாறு குவிந்த ரசிகர்களில் இருந்த முதியவர் ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் சிறுது நேரம் அந்த இடத்தில் பதட்டம் நிலவியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவின் 'ராஜமாதா'; 40 ஆண்டுகால உழைப்பு; 200 கோடி சொத்து: ரம்யா கிருஷ்ணனின் அசுர வளர்ச்சி!
லாக்கப்பில் கார்த்திக்: துடி துடித்துப் போன ரேவதி: அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் சீரியல்!