HBD Superstar Rajinikanth : "என் மாருமேல சூப்பர் ஸ்டார்" டேட்டு போட்டு வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங்!!

Kanmani P   | Asianet News
Published : Dec 12, 2021, 01:18 PM IST
HBD Superstar Rajinikanth : "என் மாருமேல சூப்பர் ஸ்டார்" டேட்டு போட்டு வாழ்த்து  சொன்ன ஹர்பஜன் சிங்!!

சுருக்கம்

 Harbhajan wishes to Superstar Rajinikanth : தனது நெஞ்சில் ரஜினிகாந்தின் படத்தை வரைந்து ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

கர்நாடக தலைநகரான பெங்களுரில் கடந்த  1950 -ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். கன்னட மொழி பின்னனியில் வளர்க்கப்பட்ட இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்த  ராமோஜி ராவ் கெய்க்வாட் என்பவருக்கு 4 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார்.

இன்று தனது  72 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு ரசிகர்கள் திரைபிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ரஜினி பிறந்த நாளுக்காக #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது 72-வது பிறந்த நாளில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நல்ல திட்டத்தை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், கமல் உள்ளிட்டோர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் கிரிக்கெட் பிரபலமான அர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ரஜினியின் உருவப்படத்தை தனது நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து ; "என் மாருமேல சூப்பர் ஸ்டார்"
80's பில்லாவும் நீங்கள் தான்
90's பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா 
என பதிவிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!