Bigg Boss5 பாஜக குறித்து விமர்சித்த பிரியங்கா ; கடுப்பாகி நாமினேட் செய்த தாமரை !!

Published : Nov 30, 2021, 07:00 AM ISTUpdated : Nov 30, 2021, 07:02 AM IST
Bigg Boss5 பாஜக குறித்து விமர்சித்த பிரியங்கா ; கடுப்பாகி  நாமினேட் செய்த தாமரை !!

சுருக்கம்

biggboss5 'தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை, வீட்டில் இருந்தாலும் பிரச்சனை' என ப்ரியங்கா பேசியதாகச் சொல்லி தாமரை நாமினேட் செய்துள்ளார். 

கடந்த வார எபிசோட் படி பள்ளிக்கூட டாஸ்கின் போது  முழுக்க முழுக்க அக்‌ஷரா மீது தவறிருக்கும் பட்சத்தில் இந்த வார இறுதி எபிசோட்டை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் அக்‌ஷராவை கொஞ்சியதோடு, சிபியை குற்றவாளியாக்கியது ரசிகர்களை எரிச்சல் மூட்டியது. இவ்வாறு எதிர்பாராத பல திருப்பங்களால் அதிரடியாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற எலிமினேஷன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

முந்தைய வாரம்  பிக் பாஸ் வீட்டை விட்டு ரசிகர்களால் முக்கிய போட்டியாளர் என்று பார்க்கப்பட்ட, இசைவாணி குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார். நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி  மதுமிதா மற்றும் இசைவாணி  என 7 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.  இவர்களில் அபிஷேக் மீண்டும் வைல்ட் கார்ட் ஏறி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். 

கடந்த வாரம் வெளியேறவுள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியானது. அதன்படி நிரூப் மற்றும் ஜக்கி பெரி ஆகியோர் குறைவான ஓட்டுக்களை பெற்று கடைசி இரண்டு போட்டியாளர்களாக  நின்றனர்.

இவர்களில் நிரூபுக்கு வெளியில் ஆதரவு அதிகம் என்பதாலும் அவர் பரபரப்புக்கு முக்கிய காரணம் என்பதாலும் அவர் இன்று வெளியேற்றப்பட மாட்டார் என சொல்லப்பட்டது. இது ஒருபுறம் இருக்க பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் அதிக ஓட்டுகளை கைப்பற்றி முதல் இரண்டு இடங்களை பகிர்ந்து கொண்டனர். 

ரசிகர்களின் கணிப்பு படியே கடந்த வாரம் "ஜக்கி பெரி" தான் வெளியேறியுள்ளார். தற்போது கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரம்யா கிருஷ்ணனால் வெளியில் அனுப்பப்பட்ட முதல் நபர் இவர்தான்.

இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் நாமினேஷன் நடைபெற்றது. அப்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சரியான காரணத்தோடு 3 பேரை நாமினேட் செய்ய வேண்டும். அப்போது, ப்ரியங்காவை நாமினேட் செய்த தாமரை, 'தாமரை நாட்டில் இருந்தாலும் பிரச்சனை, தாமரை வீட்டில் இருந்தாலும் பிரச்சனை' என ப்ரியங்கா பேசியதாகச் சொல்லி தாமரை நாமினேட் செய்கிறார். அதனை அடுத்து, இந்த வாரம் செய்யப்பவர்களின் பட்டியலை பிக் பாஸ் அறிவிக்கிறார். அதில், அக்‌ஷ்ரா,பாவனி, சிபி, இமான், ப்ரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய் என 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Movies : புஷ்பா 2 முதல் டாக்ஸிக் வரை... முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்!
Bigg Boss 10 : லீக்கான பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்... இத்தனை விஜய் டிவி பிரபலங்கள் இருக்காங்களா?