Arjunஅர்ஜுன் மீது நடிகை கொடுத்த 'மீடூ' புகாருக்கு ஆதாரம் இல்லாததால் விடுதலையாகிறாரா?

Published : Nov 29, 2021, 07:33 PM ISTUpdated : Nov 29, 2021, 08:36 PM IST
Arjunஅர்ஜுன் மீது நடிகை கொடுத்த 'மீடூ' புகாருக்கு ஆதாரம் இல்லாததால் விடுதலையாகிறாரா?

சுருக்கம்

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது கொடுத்த மீடூ புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது கொடுத்த மீடூ புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் நெருங்கி வா முத்தமிட்டுவிடாதே, அர்ஜூன் உடன் நிபுணன் ஆகிய படங்களில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன் மீது பரபரப்பு மீடூ புகார் கூறியிருந்தார். 2016 ஆண்டு நிபுணன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அர்ஜூன் அனுமதியில்லாமல் தன்னை திடீரென கட்டி அணைத்தாக புகார் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை கேள்விப்பட்ட அர்ஜுன் இதுவரை 70 நடிகைகளுடன் நடித்துவிட்டேன். யாரும் இப்படி புகார் கூறியதில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இந்த புகார் கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ்  திரையுலக ரசிகர்கள் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஸ்ருதி ஹரிஹரனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பரவின.

பின்னர் அந்த பாலியல் குற்றச்சாட்டு தனது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டதாக புலம்பினார் ஸ்ருதி ஹரிஹரன். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக போலீசார் நடத்திய விசாரணையில் அர்ஜுன் மீது சுருதி ஹரிஹரன் சொன்ன பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. தற்போது இந்த மீடூ புகார் குறித்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்களாம்.

இதுகுறித்து, ஸ்ருதி ஹரிஹரன் புகார் கொடுத்த, கப்பன் போலீஸ், நடிகைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால், அர்ஜுன் மீது, வைக்கப்பட்ட மீடூ புகார் குறித்து எந்த ஆதாரமும் இல்லாததால், அர்ஜுன் குற்றமற்றவர் என்று சொல்லி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!