Kamal Hassan: கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 'விக்ரம்' படக்குழு எடுத்த திடீர் முடிவு!

Published : Nov 29, 2021, 06:05 PM IST
Kamal Hassan:  கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 'விக்ரம்' படக்குழு எடுத்த திடீர் முடிவு!

சுருக்கம்

நடிகர் கமல்ஹாசனுக்கு (Kamalhassan) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நடித்து வரும் 'விக்ரம்' (Vikram) படத்தின் படப்பிடிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது படக்குழு. இதுகுறித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது.  

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது படக்குழு. இதுகுறித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர், நடன இயக்குனர், தொகுப்பாளர், அரசியல்வாதி, என ஆல்-ரவுண்டராக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று வந்த நிலையில், தொடர்ந்து இருமல் இருந்ததன் காரணமாக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே இவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் கமல் சார்பாக தொகுத்து வழங்கினார். அப்போது மருத்துவமனையில் இருந்தவாறு கமல் சனிக்கிழமை பேசிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசியவர்...கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால், பெரிதாக எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், அதே நேரம் கொரோனாவின் அச்சம் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என ஒரு மக்கள் பிரதிநிதியாக அறிவுறுத்தினார்.

இந்நிலையில் இவர் நடித்துவரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இதில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

குறிப்பாக லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விஜய் விஜய் சேதுபதியை இந்த படத்திலும் கமலுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. கமலுடன் விஜய் சேதுபதி சண்டையிடுவதற்காக பிரமாண்ட செட் பொள்ளாச்சியில் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது கமலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பணிகள் முழுமையாக நிறுத்திய படக்குழு
சென்னையிலேயே அந்த காட்சியை படமாக்கிட திட்டமிட்டுள்ளதாம்.

எனவே மீண்டும் இந்த காட்சிக்கான செட்டுகள் சென்னை பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கமல் முழுமையாக குணமடைந்த உடன் படப்பிடிப்பு காட்சிகள் சென்னையிலேயே நடைபெறும் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!