
“சரவணன் மீனாட்சி” சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் மனதை கவர்ந்த ரியோ ராஜ் தற்போது பிக் பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பிலிருந்தே ரியோ ராஜ் பெயர் லிஸ்டில் இடம் பெற்றிருந்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் 5 ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது சற்று நேரத்திற்கு முன்பு உறுதியானது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில், "என்னுடைய முடிவுகள் உங்களுக்கு அதிருப்தி அளிக்கலாம், ஆனால் என் செயல்கள் அப்படி இருக்காது. என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு 'Love you all'" என ரியோ ராஜ் கூறி இருந்தார். இதன் மூலமாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பங்கேற்ற ரியோ ராஜின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட பாடலுடன் சூப்பராக அறிமுகமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னதாக அவருடைய மனைவி ஸ்ருதி அவருக்கு வாழ்த்துக்கூறி அனுப்பிவைத்தார். ரியோ, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் என்னை விட நீ பத்திரமாக இரு, மகிழ்ச்சியாக இரு, நான் உன்னை நினைத்துக் கொண்டே தான் இருப்பேன். லவ் யூ என காதல் மனைவிக்கு பிரியா விடை கொடுத்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.