இன்று உடைய போகும் இதயங்கள்...? துவங்கி வைத்த கமல்..!

Published : Oct 11, 2020, 11:04 AM IST
இன்று உடைய போகும் இதயங்கள்...? துவங்கி வைத்த கமல்..!

சுருக்கம்

அக்டோபர் 4 ஆம் தேதி அமோகமாக துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று,பிக்பாஸ் அறிவித்திருக்கும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் முதல் வாரத்தின் முடிவில் போட்டியாளர்கள் முன்னிலையில் தோன்றினார். அனிதா சம்பத் மாற்று சுரேஷ் பிரச்சனை முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதால், அதற்கு நேற்றைய தினம் அமைதியாக தட்டி கொடுத்து புற்றுப்புள்ளி வைத்தார்.  

மேலும் தங்களுடைய வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்ட, அனைவரை பற்றியும் பேசினார். ஆரியை பற்றி பேசும் போது, தன்னுடைய அம்மாவும் நான் ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருக்கும் போது தான் இறந்தார். நான் வண்டியில் வந்து ஏறிய பின் தான் உண்மையை கூறினார்கள் என கமல் கண் கலங்கியதை அந்த இடத்தில் பார்க்க முடிந்தது.

நிகழ்ச்சியின் முடிவில், ஆரம்பத்தில் அனைவருக்கும் கொடுக்க பட்ட ஹார்ட் மற்றும் ஹார்ட் ப்ரோகென் டாஸ்க் மீண்டும் நடத்த படுகிறது. முதல் ஆளாக வந்த சனம், ஆரம்பத்தில் ஹார்ட் கொடுத்த சம்யுக்தா மற்றும் பாலாஜிக்கு ஹார்ட் ப்ரோகென் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த டாஸ்க் இன்றும் தொடர்கிறது. இதனை கமல் நினைவு படுத்தி துவங்கி வைப்பது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதற்க்கு ரியோ இந்த விளையாட்டை எப்படி மாற்றுவது என கேட்கிறார். அது எனக்கும் தெரியாது என கூலாக பதிலளிக்கிறார் கமல். பின்னர் இடம்பெற்ற காட்சியில், ஷிவானி மற்றும் ஆஜித்துக்கு ஹார்ட் ப்ரோகென் கொடுக்கும் ரியோ, ரேகாவிற்கு ஹார்ட் கொடுக்கிறார். இதனை அவராலேயே நம்ப முடியவில்லை என்றால் பாருங்கள்.

அந்த புரோமோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!