நிலமோசடி விவகாரம்: நடிகர் சூரிக்கு பிரபல தயாரிப்பாளர் மிரட்டல் விடுப்பதாக புகார்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 10, 2020, 07:17 PM IST
நிலமோசடி விவகாரம்: நடிகர் சூரிக்கு பிரபல தயாரிப்பாளர் மிரட்டல் விடுப்பதாக புகார்...!

சுருக்கம்

இதனையடுத்து தயாரிப்பாளர் அன்பு ராஜன் ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்தார். அதில் முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. 

இதனையடுத்து தயாரிப்பாளர் அன்பு ராஜன் ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சூரியின் இந்த குற்றச்சாட்டை விஷ்ணு விஷால் மறுத்துள்ளார். தன் மீதும் தனது தந்தை மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், சூரி தான் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு கவரிமான் பரம்பரை படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை ஒன்றை திரும்பித்தர வேண்டும் என்றும் கூறினார். மேலும் பிரச்சனையை சட்டபடி எதிர்கொள்ள உள்ளதாகவும் விளக்கமளித்தார். 

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

இந்த வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்புராஜன் தன்னை மறைமுகமாக மிரட்டியதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக மன உளைச்சலுடனே படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதாகவும் சூரி தெரிவித்துள்ளார். அன்புராஜன் பணத்தை திருப்பி கொடுப்பார் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்ததால் தான் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!
ஜன நாயகன் முதல் பராசக்தி வரை: பொங்கலுக்கு போட்டி போடும் டாப் 5 படங்களின் பட்டியல்!