
நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்கு, லாஸ்லியாவின் பெற்றோர், மற்றும் அவருடைய தங்கைகள் வந்த நிலையில், இன்றைய தினம் தர்ஷனின் அம்மா, மற்றும் அவருடைய தங்கை வரும் காட்சி இன்றைய ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.
தர்ஷன், எப்போதும் போல்... தன்னுடைய துணி மணிகளை சரித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரீஸ் டாஸ்க் வருகிறது. வெளியில் இருந்து தன்னுடைய அம்மா வருவதை அறிந்து தர்ஷன் ஓடி சென்று முத்தமிட்டு வரவேற்கிறார்.
அதே போல் தன்னுடைய தங்கையை கட்டி அணைத்து, தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தி இருவரையும் வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். அவர்கள் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த போது, திடீர் என சாண்டி ஹாப்பி பர்த்டே அட்வான்ஸ்ட் என ஏதோ அவருக்கு ஸ்வீட் வழங்குகிறார்.
பின் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும், ஓரிரு தினங்களில் வரவிருக்கும் இவருடைய பிறந்தநாளை பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழும் காட்சி ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
இன்றைய ப்ரோமோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.