
தமிழில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் நான்காவது சீசன் துவங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டாலும், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில், கொரோனா பிரச்சனை காரணமாக, சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 3 சீசன்களிலும், 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள 100 நாட்கள் நிகழ்ச்சி நடக்கும்.
ஆனால் இம்முறை, 12 போட்டியாளர்கள் மற்றும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வயல் கார்டு சுற்று மூலம் சில பிரபலங்கள் உள்ளே செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், இதுகுறித்து நிகழ்ச்சியாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கும் வரை, அது உறுதியான தகவல் இல்லை.
உண்மையில் இதுபோன்ற அதிரடி மாற்றம் கொண்டுவரப்படுகிறதா... இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.