
தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் சாக்ஷி நடிக்கிறார்.
சினிமாவில் மேலும் பிரபலமாவதற்காக தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். நேற்று ஜெய்ப்பூரில் ஹாட் ஸ்வீம் சூட்டில் இருக்கும் சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் செம்ம வைரலாகின. இந்நிலையில் இன்று கோவாவின் சன்பர்ன் விழாவில் பங்கேற்ற சாக்ஷி அந்த புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குட்டி டிராயர், வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டாப், சாண்டில் கலர் ஓவர் கோர்ட் சகிதமாக செம்ம ஹாட் போஸ்களை கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் சாக்ஷி. மேலும் தனது ஓட்டல் அறையில் படுக்கையறையில் இருந்து அந்தரத்தில் துள்ளிக் குதிப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சாக்ஷியின் அந்த சேட்டை புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம லைக்குகளை குவித்து வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த குறுப்புக்கார நெட்டிசன் ஒருவர், குரங்கு கூட இப்படித் தான் குதிக்கும் என கமெண்ட் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.