தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வில்... பிக்பாஸ் சாக்ஷி - நடிகர் சூரி..!

By manimegalai aFirst Published Mar 27, 2020, 5:52 PM IST
Highlights

கொரோனா வைரஸ் குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பிரபலங்கள் பலரும் தானாக முன்வந்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், அரசாங்கமும் தற்போது பிரபலங்களை கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை பேச வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது.
 
அந்த வகையில், தற்போது பிக்பாஸ் பிரபலமான சாக்ஷியும், காமெடி நடிகர் சூரியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவில் சாக்ஷி கூறியுள்ளதாவது...  "கொரோனா நம்மை என்ன பண்ண போகுதுனு, இருந்துடாதீங்க.  அதனால வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த உடனேயே கை கால்களை சோப்பு போட்டு நல்லா சுத்தம் பண்ணுங்க.

சளி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அரசு சொல்லும் விஷயத்தை கேட்டு நடந்தால் கொரோனாவில்  இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம் என சாக்ஷி கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் சூரி கூறுகையில்... கொரோனாவில் இருந்து  நம்மை பாதுகாத்துக் கொள்ள கண்ணு ,மூக்கு, வாய் போன்றவற்றை அதிகம் தொடுவதை நிறுத்த வேண்டும்.

நீங்கள் அடிக்கடி கை வைக்கும் இடங்களில் கிருமிநாசினி வைத்து சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 144 தடை என்பது விடுமுறை அல்ல. உங்களையும் குடும்பத்தை, பாதுகாக்க அரசு போட்ட உத்தரவு. பொறுப்பான குடிமகனாக இருந்து குடும்பத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் என பேசியுள்ளார்.

click me!