
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகளை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சீனா மீண்டும் வரும் இதே தருணத்தில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!
இந்தியாவில் வைரஸ் தாக்குதலால் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை மீண்டும் மீட்டெடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.