’தடிமாடு’ வனிதாவை வரிந்துகட்டிக்கொண்டு காப்பாற்றும் பிக்பாஸ் கமல்...கடுப்பாகும் போட்டியாளர்கள்...

Published : Aug 23, 2019, 04:05 PM IST
’தடிமாடு’ வனிதாவை வரிந்துகட்டிக்கொண்டு காப்பாற்றும் பிக்பாஸ் கமல்...கடுப்பாகும் போட்டியாளர்கள்...

சுருக்கம்

பிக்பாஸ் இல்லத்தின் ‘தடிமாடு’என்று நடிகை கஸ்தூரியால் அடிக்கடி செல்லமாக அழைக்கப்படும் வனிதாவை ரேட்டிங் வேண்டும் பரபரப்பு வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கமல் தொடர்ந்து அவரை அரவணைத்துக் காப்பாற்றி வருவதாக மற்ற போட்டியாளர்க செம கடுப்பில் உள்ளனர்.  

பிக்பாஸ் இல்லத்தின் ‘தடிமாடு’என்று நடிகை கஸ்தூரியால் அடிக்கடி செல்லமாக அழைக்கப்படும் வனிதாவை ரேட்டிங் வேண்டும் பரபரப்பு வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கமல் தொடர்ந்து அவரை அரவணைத்துக் காப்பாற்றி வருவதாக மற்ற போட்டியாளர்க செம கடுப்பில் உள்ளனர்.

 "பிக்பாஸ் சீசன் 3யில் ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் டாஸ்குகளில் சிறப்பாக ஃபெர்மான்ஸ் செய்த மூன்று நபர்களை கேப்டன் பதவிக்கான போட்டியில் கலந்து கொள்ள அறிவிப்பார்கள். அதே போன்று  மோசமாக ஃபெர்மான்ஸ் செய்த இரண்டு நபர்களைத் ஜெயிலுக்கு அனுப்புவார்கள்.இந்த வார ஸ்கூல் டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, சேரன் மூவரும் சிறந்து விளங்கியதால் அவர்கள் கேப்டன் பதவிக்கான போட்டியில் போட்டி போடுகின்றனர். 

இதில் சேரன் பெயரைச் சொன்னது சரியில்லை என்றும் தான் நன்றாக செய்ததால் தன்னை ஏன் பரிந்துரை செய்யவில்லை என்று வழக்கம் போல் சண்டையிட்டார் வனிதா. ஆனால் இந்த முறை அவரின் பேச்சு சபையில் எடுபடாததால் அவருக்கு அந்த சிறந்த பவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் ஃபெர்மான்ஸ் சரியாக செய்யாதவர்கள் பெயரை அறிவிக்க தேவையில்லை என்று பிக் பாஸ் அறிவித்தார். 

திடிரென்று ஏன் பிக் பாஸ் இப்படி அறிவித்தார்? என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பினர். பின்பு தற்போது தான் தெரியவந்துள்ளது மோசமாக ஃபெர்மான்ஸ் செய்தவர்களின் பட்டியலில் வனிதாவின் பெயரை கூற சில பேர் ஏற்கனவே பேசிவைத்திருந்தது. அதனால் தான் இந்த முறை மோசமாக ஃபெர்மான்ஸ்  செய்தவர்கள் பட்டியல் தேவையில்லை என்று பிக்பாஸ் அறிவித்ததாகத் தெரிகிறது. ஏற்கனவே வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததை விரும்பாத மக்களுக்கு இது மேலும் எரிச்சலூட்டும் வகையில் அமைந்துள்ளதாகப் புலம்பி வருகின்றனர். இன்னொரு பக்கம் கமல் வனிதாவை வைத்து தொடர்ந்து உள்ளே கலகத்தைத் தூண்டி ரேட்டிங் ஏற்றவே இவ்வளவு அல்பத்தனமாக நடந்துகொள்கிறார் என்று இன்மேட்களே புலம்புகிறார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?