இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற பிளான் போடும் நான்கு போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?

Published : Jul 02, 2019, 12:51 PM IST
இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற பிளான் போடும் நான்கு போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?

சுருக்கம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி, கடந்த ஜூன் 23ஆம் தேதி துவங்கப்பட்டது.  தற்போது ஒரு வாரம் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு பெரிதாக எந்த ஒரு அதிருப்தியும் இல்லாமல் சுமூகமாக செல்கிறது.  

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி, கடந்த ஜூன் 23ஆம் தேதி துவங்கப்பட்டது.  தற்போது ஒரு வாரம் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு பெரிதாக எந்த ஒரு அதிருப்தியும் இல்லாமல் சுமூகமாக செல்கிறது.

மேலும் போட்டியாளர்களும், இதுவரை மக்கள் மத்தியில் பெரிதாக எந்த ஒரு எதிர்ப்பையும் சம்பாதிக்கவில்லை.  ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகள் எழுந்து வருகிறது.

ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், முதல் வாரம் எந்த ஒரு போட்டியாளரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படவில்லை.  ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து, ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரபலங்கள் வெளியேற்றப்படும் சம்பவங்கள் அரங்கேறும்.  அதன் அடிப்படையில் நேற்று பிக் பாஸ் போட்டியாளர்கள்,  இரண்டு பிரபலங்களை காரணத்தோடு நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறினார்.

அதன்படி அனைத்து பிரபலங்களும், தாங்கள் காரணங்களை கூறி, சில பிரபலங்கள் பெயர்களை சொல்லி நாமினேட் செய்தனர். இதில் ஒரே கேங்காக செயல்படும்,  நான்கு போட்டியாளர்கள் மட்டும் இரண்டு பிரபலங்களின் பெயர்களை கூறியுள்ளது, இவர்கள் ஏற்கனவே பிளான் பண்ணி இப்படி செய்தார்களா என்கிற சந்தேகத்தை வரவைத்துள்ளது. 

அதாவது, "சாக்ஷி,  ஷெரின், அபிராமி, கவின், ஆகிய நான்கு பேரும்...  மதுமிதா மற்றும் மீரா மிதுன் பெயரை சொல்லி வைத்தது போல் கூறியுள்ளது தான் இந்த சந்தேகத்திற்கு காரணம். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Makar Sankranti Bollywood Songs: பட்டம் விடும் சல்மான், அமீர், SRK! ஆட்டம் போட வைக்கும் பாலிவுட் பாடல்கள்.!
Ramya Pandian : பனியிலும் கொள்ளை அழகில் ரம்யா பாண்டியன் - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!