நான்கு பிரபலங்களில் முதலில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா? அரசல் புரசலாக வந்த தகவல்!

Published : Oct 05, 2019, 03:40 PM IST
நான்கு பிரபலங்களில் முதலில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவரா? அரசல் புரசலாக வந்த தகவல்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார் என முடிவு எடுக்க முடியாத அளவிற்கு, மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் இருந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார் என முடிவு எடுக்க முடியாத அளவிற்கு, மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே, தன்னுடைய நகைச்சுவை பேச்சால், அனைவர் மனதையும் கவர்ந்த சாண்டி வெற்றி பெறுவாரா, அல்லது சைலண்டாக இருந்து நடுநிலையாக விளையாடும் முகேன் வெற்றி பெறுவாரா என்கிற பேச்சுக்களும் நிறைய விவாதிக்கப்படுகிறது.

ஆண்களுக்கு பெண்களும் குறைந்தவர்கள் இல்லை என, இவர்கள் இருவருக்கு போட்டியாக உள்ளே உள்ள லாஸ்லியா வெற்றி கோப்பையை கை பற்றவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதே போல் ஷெரீனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த நான்கு பிரபலங்களில் முதலில் நிகழ்ச்சியை விட்டு வெளியேற உள்ளது யார் என்கிற, தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது மக்களின் ஓட்டு அடைப்படையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

அந்த வகையில் வெளியே கசிந்துள்ள தகவலின் படி, முதலில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ஷெரின் தான் கமலஹாசனால் வெளியேற்ற பட உள்ளாராம். கடந்த வாரமே தர்ஷனுக்கு பதிலாக ஷெரின் தான் வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என தர்ஷன் வெளியேறியது இப்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anupama Parameswaran : காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்
Aparna Balamurali : கண்களால் ரசிகர்களை கைது செய்யும் 'அபர்ணா பாலமுரளி'.. அழகிய புகைப்படங்கள் இதோ!