நான் பேசிய எதையும் பிக்பாஸ்சில் காட்டவில்லை! நடிகை அபிராமி கூறிய காரணம்!

Published : Aug 24, 2019, 01:40 PM IST
நான் பேசிய எதையும் பிக்பாஸ்சில் காட்டவில்லை! நடிகை அபிராமி கூறிய காரணம்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நடிகை அபிராமி, வெளியே வந்ததும் முதல் வேலையாக, தல அஜித்துடன் தான் நடித்திருந்த, 'நேர்கொண்ட பார்வை' படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார்.  இது குறித்த வீடியோ ஒன்றையும் பதிவு செய்து,  ரசிகர்கள் அவரை எந்த அளவிற்கு வரவேற்றனர் என்பதை தெரிவித்தார்.  

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டியின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி சில்வியா மற்றும் குழந்தையை சந்தித்தபோது எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.

மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் சரவணனையும் சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதெல்லாம் ஒரு புறம் இருக்க எப்போதும் பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கும் அபிராமி, உள்ளே இருந்த போது, ஏன் ஒருமுறை கூட அஜித் பற்றியும், நேர்கொண்ட பார்வை படம் பற்றியும் எதுவும் பேசவில்லை என பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அபி, மிகவும் அதிர்ச்சியாக பதில் கொடுத்தார்.

அது என்னவென்றால், பிக்பாஸ் வீட்டில் நான் அஜித் பற்றியும், நேர்கொண்ட பார்வை படத்தை பற்றியும் அதிகம் பேசினேன். ஆனால், இந்த படத்தின் உரிமை இவர்களிடம் இல்லாததால் என்னவென அது குறித்த காட்சிகளை ஒளிபரப்ப வில்லை என தெரிவித்துள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?