
பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை விட அப்பா - மகள் என்கிற ஒரு பாண்டிங்கில் தொடர்ந்து விளையாடி வருபவர்கள் லாஸ்லியா மற்றும் சேரன். பல முறை சேரன், லாஸ்லியா இங்கு இருப்பதால் தான், நானும் இங்கு இருக்கேன். என் மகளை போல் தான் அவரை பார்க்கிறேன் என கூறியுள்ளார்.
லாஸ்லியாவும், தன்னுடைய தந்தை பார்ப்பதற்கு, சேரன் போலவே தான் இருப்பர் என கூறியுள்ளார். எனினும் சமீபத்தில், இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு, லாஸ்லியா சேரனிடம் பேசாமல் இருந்த போது மனதளவில் மிகவும் நொந்து போனார்.
இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் ஒரு சிறந்த தந்தையாக தன்னை, நிலைநிறுத்துவது போல் இவர் செய்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
லாஸ்லியா, தன்னை விட கவினுடன் தான் அதிக நேரம் செலவிடவும் இருக்கவும் விரும்புகிறார் என்பது தெரிய வந்ததும், கவினை அழைத்து, லாஸ்லியா இப்போது உன்னுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறார் எனவே அவரை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கூறுகிறார்.
அதை தொடர்ந்து, லாஸ்லியாவையும் அழைத்து கவினை பற்றி பேசுகிறார். இதற்கு லாஸ்லியா, அவனும் தன்னை பிடித்திருக்கிறது என கூறுகிறான். எனவே, அவனுக்காக கண்டிப்பாக நான் நிற்பேன். அதே போல் எடுத்துவாக இருந்தாலும் வெளியே சென்று, குடும்பத்துடன் சேர்ந்து தான் முடிவு செய்வேன் என கூறுகிறார்.
சேரன், மிகவும் தெளிவாக ஒரு பெரிய மனிதர் என்பதை நிரூபிக்கும் வகையில், இருவரையும் அழைத்து பேசியது, லாஸ்லியாவை வாய் வார்த்தைக்காக மகள் என்று சேரன் அழைக்க வில்லை உண்மையிலேயே அவர் மீது இந்த அளவிற்கு அக்கறையோடு நடந்து கொள்வது, பெருமையுமாக உள்ளது என அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.