இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா...? வெளியான தகவல்...!

 
Published : Jul 29, 2018, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா...? வெளியான தகவல்...!

சுருக்கம்

bigboss 2 this week elimination is vaishnavi

பிக்பாஸ் வீட்டில் இருந்து, வாரம் தோறும் ஒரு பிரபலம் வெளியேறி கொண்டிருக்கின்றனர். அதன் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

 இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் நடிகர் பொன்னம்பலம், மகத், யாஷிகா, மும்தாஜ் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.

 இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், வாரம் தோறும் இந்த பட்டியலில் என் பெயர் இடம்பெறுவதால் 'நான் மக்களிடம் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிட்டதாக பொன்னம்பலம் கூறுகிறார். பின் நான் வெளியே போக மாட்டேன் என்ற நம்பிக்கை இருப்பதாக மகத் கூறுகிறார். இதைதொடர்ந்து கமலிடம் பேசிய யாஷிகா நான் இந்த வீட்டில் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகவும் அதனால் வெளியேற மாட்டேன் என நம்பிக்கை உள்ளதாக கூறுகிறார்.

இதனால் மீதம் இருக்கும் மும்தாஜ் மற்றும் வைஷ்ணவியை காட்டி ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார். 

மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த வாரம் வைஷ்ணவி வெளியேற்றப்படுவதாகவும், ஆனால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவை ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைத்தது போல் வைஷ்ணவியையும் ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என சமூக வலைத்தளத்தில் பலர் பதிவு செய்து வருகிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!