விஷாலை பற்றி ‘உவ்வ்வ்வ்வே...’ விமர்சனத்தை கொட்டிய தயாரிப்பாளர்! பதிலடியை இடியாய் இறக்கப்போகும் விஷால்!: தாறுமாறு தகராறில் தயாரிப்பாளர் சங்கம்.

By Vishnu PriyaFirst Published Jan 26, 2019, 7:06 PM IST
Highlights

தமிழ் சினிமாக்களில் வரும் ஆக்‌ஷன் அதிரடிகளை விட, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் மோதல்கள்தான் ஹெவி வெயிட்டாக இருக்கிறது. தலைவர்  பதவிக்கு வந்த பிறகு நாளொரு சர்ச்சையும்,  பொழுதொரு பஞ்சாயத்துமாக போய்க் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாக்களில் வரும் ஆக்‌ஷன் அதிரடிகளை விட, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் மோதல்கள்தான் ஹெவி வெயிட்டாக இருக்கிறது. தலைவர்  பதவிக்கு வந்த பிறகு நாளொரு சர்ச்சையும்,  பொழுதொரு பஞ்சாயத்துமாக போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் ஏ.எல்.அழகப்பன் தலைமையில் ஒரு டீம் இந்த சங்கத்துகு பூட்டே போட்டு விஷாலை அசிங்கப்படுத்தியது. பூட்டை அகற்றப்போன விஷாலை போலீஸ் கைது செய்து அடுத்த அதிர்ச்சியை கூட்டியது.

இதெல்லாம் தீர்ந்து ஒருவழியாக இளையராஜா இசை நிகழ்ச்சியை தயார் செய்வதில் பிஸியாக இருக்கிறார் விஷால். ஆனால்  தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்று போயுள்ளது. அதில் விஷால் தலைமையேற்ற பிறகு நடந்திருக்கும் முறைகேடுகள், பஞ்சாயத்துகள் பற்றி கிழிகிழியென கிழித்திருக்கிறார்கள். 

விஷாலுக்கு எதிராக வழக்கு, மோதல் என முஸ்டி முறுக்கும் தயாரிப்பாளர் சதீஷ்குமாரோ...”விஷாலோட ஆட்டமும், ஆணவமும் தாங்க முடியலை. ராமநாராயணன் சார் 7.53 கோடி ரூபாயை சங்கத்தின் வைப்பு நிதியாய் வெச்சுட்டு போனார். அதைப் போய் எடுத்து செலவு பண்ணியிருக்கார் விஷால். யாரும் செய்ய துணியாத இந்த காரியத்தை இவர் எப்படி செய்தார்? இந்த துணிச்சல் எங்கிருந்து வந்துச்சு? 
இளையராஜா  நிகழ்ச்சிக்கு தடைசெய்வது எங்கள் நோக்கமில்லை. ஆனால் விஷாலின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.

சங்கத்தின் கணக்கு வழக்கை பல நாட்களாக கேட்டும் தராதவர்கள், நான் கோர்ட்டுக்கு போனதும் எல்லா உறுப்பினர்களுக்கும் விளக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தின் நான்காவது பக்கத்தில் ‘சங்கத்தின் வைப்பு நிதியிலிருந்து முறையாக செலவு செய்தது தவறு என்று வைத்துக் கொண்டாலும், அதை இசை நிகழ்ச்சி மூலம் மீண்டும் உள்ளே கொண்டு வருவோம்!’ என்று சொல்லியுள்ளார். இதன் மூலம் நிதியை சுரண்டியதை நாகரீகமாக ஒத்துக் கொண்டு, அதை தருவேன்னு நியாயமும் படுத்தியிருக்கிறார். பணம் எடுத்ததை ஒத்துக்கிட்டு, கொஞ்ச நாள்ள திருப்பி கொடுத்துட்டா திருடன் திருடனில்லைன்னு ஆகிடுவானா?” என்று கேட்டு அதிர வைக்கும் சதீஷ்...அடுத்து சொன்ன வார்த்தைதான் பேரதிர்ச்சி

“சங்கத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றினால்தான் சங்கம் புதுப்பொலிவு பெறும், சுத்தமாகும். விஷாலை உடனடியாக அகற்ற வேண்டும்.” என்றுள்ளார். 

தன்னை இப்படியொரு தயாரிப்பாளர் ‘கழிவு’ என்று மிக மிக கேவலமாக மட்டம் தட்டியிருப்பதை விஷாலால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லையாம். தன் நண்பர் குழாமிடம் போனில் வெடித்தும், கடித்தும், புலம்பியும் கொட்டிவிட்டாராம். சதீஷுக்கு விஷால் தரப்போகும் பதிலடி மிகப்பெரிய இடியாய் இருக்கும் என்கிறார்கள். ஆக இப்போது இருக்கும் சூழலில் கூடிய விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் டீம் மற்றும் அவருக்கு எதிரான டீமிடையே அடிதடி நடந்தாலும் ஆச்சரியமில்லையாம்.

click me!