விரைவில் பிக்பாஸ் சீசன் 4... லாக்டவுனில் முடங்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன தனியார் தொலைக்காட்சி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 09, 2020, 10:02 PM IST
விரைவில் பிக்பாஸ் சீசன் 4... லாக்டவுனில் முடங்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன தனியார் தொலைக்காட்சி...!

சுருக்கம்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக வேறொரு பிரபலம் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் அடிப்பட்டது. இதனை மறுத்துள்ள விஜய் டி.வி. நிர்வாகம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று கூறியுள்ளது. 

இந்தியில் 13 சீசன்கள் வரை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தான், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 2 அல்லது 3 சீசன்களையே கடந்துள்ளது.  தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மலேசிய பாப் பாடகர், முகேன் வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தர்ஷன், லாஸ்லியா, கவின் ஆகியோர் ஒரு சில காரணங்களால் வெற்றிபெறவில்லை.

ஒரு வேலை பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு,  கவின் வெளியில் வரவில்லை என்னால், அவரே வெற்றியாளராக மாறியிருக்கலாம். லாஸ்லியா பைனல் போக வேண்டும் என்பதற்காக கவின் தானாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.ஓவ்வொரு  நாளும் பிக்பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.

முதல் சீசனில் ஜூலி, காயத்ரி, ஓவியா, இரண்டாவது சீசனில் மகத், மூன்றாவது சீசனில் மீரா மிதுன் ஆகியோர் தான் சர்ச்சைகளுக்கும், டி.ஆர்.பி.க்கும் முக்கியமான நபர்களாக திகழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தால் புகழும், பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா, இடையழகி ரம்யா பாண்டியன் ஆகியோர் பெயர் அடிபட்ட நிலையில், விஜய் டிவி மூலம் பிரபலமான சிலரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஜே மணிமேகலை, மற்றும் ஷிவாங்கி ஆகியோர் பெயரும் அடிபட்டு வருகிறது. அதே நேரத்தில் சமீப காலமாக, ஹாட் போட்டோஸ் மூலம் சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் நடிகை கிரண், பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேசி வருகிறார்களாம் விஜய் டிவி நிகழ்ச்சி தரப்பினர். 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக வேறொரு பிரபலம் தொகுத்து வழங்குவார் என தகவல்கள் அடிப்பட்டது. இதனை மறுத்துள்ள விஜய் டி.வி. நிர்வாகம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று கூறியுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டு சீரியல் ஷூட்டிங் நடத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளனர். எனவே கூடிய விரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான திட்டம் போட்டு வேலைகள் துவங்கப்பட்டும் என விஜய் டி.வி. வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்