
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த "பிக்பாஸ்-3" நிகழ்ச்சி, அண்மையில் நிறைவடைந்தது.
இந்த சீஸனில் பிரபலமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் தனது ஒளிவுமறைவில்லாத நேர்மையான குணத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் 'பருத்திவீரன்' புகழ் சரவணன்.
பிக்பாஸ் வீட்டில் நடன இயக்குநர் சாண்டி, நடிகர் கவின் ஆகியோருடன் இணைந்து மூவர் அணியாக வலம்வந்த சரவணன், இயக்குநர் சேரனை ஒருமையில் பேசியது - கல்லூரி படிக்கும் காலத்தில் பெண்களை உரசுவதற்காக பேருந்தில் சென்றதாகக் கூறியது என அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கினார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே, தனது மனைவி மற்றும் மகன் குறித்தும் அவர் கூறியிருந்தார். மேலும், முதல் மனைவி இருக்கும்போதே வாரிசுக்காக 2-வது திருமணம் செய்து கொண்டு, அவள் மூலம் குழந்தை பெற்று தன்னை ஆண்மகன் என நிரூபித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
அத்துடன், ஒரேசமயத்தில் தனது இரு மனைவிகளையும் ஒன்றாக விட்டு வந்ததாகவும், அதுதான் தனக்கு பயமாக இருப்பதாகவும் காமெடியாகக் கூறி பிக்பாஸ் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
இதனிடையே, அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய சரவணன், நிகழ்ச்சியிலிருந்து வலுக்கட்டாயமாக பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், தனது மகன் மற்றும் இரண்டு மனைவிகளுடன் சரவணன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை, சரவணனை இரண்டு மனைவிகளுடன் ஒன்றாக யாரும் கண்டதில்லை என்பதால், இந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.