இதுதான் விஷயமா? ஜிங் ஜாங் போடும் முதல் சீசன் போட்டியாளர்கள்!ஐஸ்வர்யாவை காப்பாற்ற அரங்கேறும் நாடகம்!

Published : Sep 14, 2018, 02:30 PM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
இதுதான் விஷயமா? ஜிங் ஜாங் போடும் முதல் சீசன் போட்டியாளர்கள்!ஐஸ்வர்யாவை காப்பாற்ற அரங்கேறும் நாடகம்!

சுருக்கம்

பிக்பாஸ் இரண்டாவது சீசன் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இவர்களில்  வாரம் ஒரு போட்டியாளர் வீதம் இரண்டாவது வாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

பிக்பாஸ் இரண்டாவது சீசன் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இவர்களில்  வாரம் ஒரு போட்டியாளர் வீதம் இரண்டாவது வாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் இது வரை, மமதி ஸாரி, ஆனந்த் வைத்தியநாதன், ரம்யா, ஷாரிக், மஹத், வைஷ்ணவி, பொன்னம்பலம், நித்தியா ஆகியோர் மக்கள் போட்ட வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். 

இவர்களுடைய எலிமினேஷனை  மக்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் கடந்த வாரம் மக்களின் டார்கெட்டாக இருந்தது ஐஸ்வர்யா தான். ஆனால் பிக்பாஸ் அவரை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் சென்ராயனை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றியது. இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மேல் இருந்த நம்பிக்கையே பலருக்கு போய் விட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஸ்வாரஸ்யத்தை கூட்ட, முதல் சீசன் போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். இவர்கள் திடீர் வருகையின் காரணம் ஏன் என பலர் மத்தியிலும் ஒரு கேள்வி இருந்து வந்தது. நிகழ்ச்சியை நீங்கள் உற்று கவனித்தால், அர்த்தம் உங்களுக்கே புரிந்திருக்கும்.

ஆம்... இதுவரை மக்கள் மனதில் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்ற போட்டியாளர்களின் ஒருவராக இருக்கும் ஐஸ்வர்யாவை தொடர்ந்து காப்பாற்றி வரும் பிக்பாஸ். முதல் சீசன் போட்டியாளர்கள் மூலம் அவரை நல்லவராக காண்பிக்க முயற்சித்து வருவதாகவே நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.

முதல் சீசன் போட்டியாளர், ஆர்த்தி... பிக்பாஸ் வீட்டு மருமகளே என ஐஸ்வர்யாவுக்கு ஓவராகவே ஐஸ் வைக்கிறார். இவரை தொடர்ந்து கயாத்திரியும், சென்ராயனிடம் ஐஸ்வர்யா அதிகப்படியாக கூறிய பொய்களை நியாயப்படுத்தி பேசினார். குறிப்பக ஐஸ்வர்யா அவர் கூறிய பொய்யை ஒற்றுக்கொண்டதை புகழ்ந்து தள்ளி ஜிங் ஜாங் போட்டார்.

இதன் மூலம் முதல் சீசன் போட்டியாளர்களை உள்ளே அனுப்பி, பிக்பாஸ் ஐஸ்வர்யா மீது உள்ள நெகடிவ் இமேஜை மாற்ற இது பிக்பாஸ்சால் நடத்தப்படும் நாடகமா எனவே  ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் கொடுக்கும் சலுகைகள் குறித்து நேரடியாகவே விமர்சித்து பேசியுள்ள நிலையில் அவரையும் மீறி ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் இப்படி சலுகைகள் கொடுக்க காரணம் என்ன? அவரை காப்பாற்ற முயற்சிப்பது ஏன்? என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!