ஐயோ பாவம்... யாஷிகாவுக்கு நடந்த சோகம் ? குண்டுக்கட்டா தூக்கி செல்லும் போட்டியாளர்கள்!

Published : Sep 14, 2018, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST
ஐயோ பாவம்... யாஷிகாவுக்கு நடந்த சோகம் ? குண்டுக்கட்டா தூக்கி செல்லும் போட்டியாளர்கள்!

சுருக்கம்

பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் உள்ளே சென்றது முதல் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. திடீர் திடீர் என போட்டியாளர்களுக்கு உடல் நலம் இல்லாமல் போகிறது பின் அவர்கள் மீண்டும் சகஜமான நிலைக்கு திரும்புகிறார்கள்.

ஏற்கனவே பலூன் வைத்து ஒரு டாஸ்க் கொடுத்தபோது, சினேகன் பாலாஜியின் கையில் உள்ள பலூனை உடைக்க முயன்றார். அப்போது அவர் கால் வழுக்கி விஜி மீது விழுந்து அவர் கழுத்து வலியால் துடைத்தார். பின் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என தெரியவில்லை. திடீர் என யாஷிகா பெட்டில் அமர்ந்திருந்த போது மயங்கி விழுகிறார். உடனே போட்டியாளர்கள் அனைவரும் பதறுகிறார்கள். 

மும்தாஜ், மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவருக்கு தண்ணீர் கொடுக்கிறார்கள் ஆனால் அதன் பின் அவருடைய நிலை இன்னும் மோசமாகிறது. மிகவும் சத்தமாக ஏப்பம் விடுகிறார். அவரை பிக்பாஸ் குரல் கண்பேஷன் அறைக்கு வருமாறு கூறுகிறது. 

யாஷிகாவுக்கு சுத்தமாக சுயநினைவு இல்லாததால் அவரை சக போட்டியாளர்கள் அனைவரும், குண்டு காட்டாக தூக்கிக்கொண்டு பிக்பாஸ் அறைக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த ப்ரோமோ யாஷிகா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் யாஷிகாவுக்கு என்ன ஆனது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!