பிக் பாஸ் ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்ட காயத்திரி; காரணம் என்ன தெரியுமா?

Published : Sep 17, 2018, 08:18 PM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
பிக் பாஸ் ரசிகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்ட காயத்திரி; காரணம் என்ன தெரியுமா?

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளர்கள் எப்போதுமே சீசன் 2 போட்டியாளர்களை விட ஒரு படி முன்னால் தான் இருக்கின்றனர். அன்பு காட்டுவதிலாகட்டும் வெறுப்பதிலாகட்டும் எல்லாவற்றிலுமே சீசன் 1 போட்டியாளர்களுக்கு தான் மக்கள் மனதில் முதல் இடம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளர்கள் எப்போதுமே சீசன் 2 போட்டியாளர்களை விட ஒரு படி முன்னால் தான் இருக்கின்றனர். அன்பு காட்டுவதிலாகட்டும் வெறுப்பதிலாகட்டும் எல்லாவற்றிலுமே சீசன் 1 போட்டியாளர்களுக்கு தான் மக்கள் மனதில் முதல் இடம். காயத்திரி ஜூலி போன்றவர்களை வெறுத்த அளவிற்கு பிக் பாஸ் ரசிகர்கள் வேறு யாரையும் இது வரை வெறுத்தது கிடையாது. சீசன் 2 போட்டியாளர்கள் பல மக்களின் அன்புக்கு மட்டுமல்ல , வெறுப்புக்கு கூட தகுதி பெறவில்லை.
சென்ற வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இதற்கு சரியான ஒரு எடுத்துக்காட்டு. பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களான காயத்திரி, சினேகன், சுஜா, வையாபுரி, ஹாரதி போன்றோர் பிக் பாஸ் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தனர். அப்போது காயத்திரியை தான் வைத்த கண் வாங்காமல் கண்கானித்திருக்கின்றனர் பிக் பாஸ் வெறியர்கள்.


ஆனால் கடைசி வரை வாயை திறக்காமல் நைசாக எஸ்கேப் ஆகி விட்டார் காயத்திரி. ஆனாலும் பிக் பாஸ் ரசிகர்கள் என்ன சாதாரணமானவர்களா? பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் காயத்திரியை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். அதற்கு காரணம் அவர் அணிந்திருந்த உடை தான். பிக் பாஸ் கடைசி நாள் அன்று காயத்திரி அணிந்திருந்த அறைகுறை ஆடையும், அதை போட்டுக்கொண்டு அவர் அமர்ந்திருந்த விதமும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது.
உடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் தான். ஆனாலும் பிக் பாஸ் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய நிகழ்ச்சி . மேலும் இந்த சீசன் போட்டியாளர்களில் பலர் மிகவும் டீசண்டாக தான் உடை உடுட்தி இருந்தனர். யாஷிகா ஐஸ்வர்யா போன்றோர் மட்டுமே இது போன்ற சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி வந்தனர். ஆனால் சமீப காலமாக அப்படி எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் எல்லா விஷயத்திலும் கவனமாக இருந்த காயத்திரி இந்த ஒரு விஷயத்தில் மிஸ் ஆகிவிட்டார். இதனால் மீண்டும் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார் தலைவி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய்யின் வளர்ச்சியை 28 வருடங்களுக்கு முன்பே கணித்து ஆரூடம் சொன்னவர்... யார் இந்த மோகன்ராஜ்?
கதிரை அடிக்க பாய்ந்த ஞானம்.. எதிரிகளாக மாறும் தம்பிகள்; தடாலடி முடிவெடுத்த குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது