
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே, முதல் சீசன் போட்டியாளர்கள் ஓவியா, ஹரீஷ் கல்யாண் ஆகியோர் வந்து சென்ற நிலையில். கடந்த வாரம், காயத்திரி, சினேகன், ஆர்த்தி, சுஜா, வையாபுரி, ஆரவ், ஆகியோர் வருகை தந்தனர்.
ஆனால் பலரும் அதிகம் எதிர்ப்பார்த்தது ஜூலியை தான். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு விடுத்தும் அவர் வரமுடியாது என கூறிவிட்டாராம்.
இதுக்கு முக்கிய காரணம், இவருக்கு முதல் சீசன் போட்டியாளர்கள் சிலருடன் மனஸ்தாபம் உள்ளதாம் . ஒருவேளை அவர்களை நேரில் பார்த்தால் கோவம் பொங்கி சண்டை கூட வரலாம் என்பதால் தான்.
அதே போல்... தற்போது இவர் ஷூட்டிங்கிலும் செம பிஸியா இருக்காராம். காரை விட்டு இறங்கவே நேரம் இல்லையாம். ஜூலி மேடம், 'அம்மன் தாயி' படத்திலும் 'அனிதா MBBS ' பட ஷூட்டிங்கிலும் இருக்காங்கனு தான் இவருடைய போன்னை அட்டன் செய்து, இவருடைய மேனேஜர் கூறிவருகிறாராம்.
இப்போதெல்லாம், ஜூலி அவுட்டிங் கூட சென்னை, மற்றும் உள்ளூருக்கு செல்வதில்லையாம். வெளியூர் தானாம். இதனால் வழி காட்டிய பிக்பஸ்ஸை கூட யோசிக்காமல் தூக்கி எரிந்து பேசிட்டாங்களாம் அம்மணி. முக்கியமாக, இவருக்கு இப்போது நல்ல பெயர் இருக்குதாம். ஆனால் திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து பெயரை கெடுத்துக்க விரும்பலையாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.