உதடு பெருசா இருக்குனு கிண்டல் பண்ணாங்க: இப்போ அதுதான் என்னோட அடையாளம்: பூமிகா!

By Rsiva kumar  |  First Published Jan 16, 2025, 10:09 PM IST

Bhumika Chawla has spoken about her Lips : என்னோட சின்ன வயசுல உதடு பெருசா இருக்குனு கிண்டல் பண்ணாங்க. ஆனால், இப்போ அதுதான் என்னுடைய அடையாளம் என்று நடிகை பூமிகா கூறியிருக்கிறார்.


Bhumika Chawla has spoken about her Lips : விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் பூமிகா சாவ்லா. இந்தப் படத்தில் புதுமுக நடிகை போன்று இல்லாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இந்தப் படத்திற்கு பிறகு ஜில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள், யு டர்ன், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே என்று ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். இதில் பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் படம் தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன. கடைசியாக இவருடைய நடிப்பில் பிரதர் படம் வெளியானது.

மூன்றே படத்தில் 3000 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோயின்! யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின்?

Tap to resize

Latest Videos

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியை விட தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் சிறு வயதில் தனக்கு நேர்ந்த மோசமான கேலி கிண்டல் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் சிறு வயதாக இருக்கும் போது என்னுடைய உதடு பெரியதாக இருந்தது. அதை வைத்து எல்லோருமே என்னை கேலியும் கிண்டலும் செய்தார்கள். இதனால் மன வேதனை அடைந்தேன். ஆனால், இப்போது அது தான் என்னுடைய அடையாளமே என்று பெருமையாக கூறியிருக்கிறார்.

செல்ஃபி எடுக்க ஹெல்ப் கேட்ட சிவகார்த்திகேயன்: எஸ்கேயின் வளர்ச்சி பற்றி பேசிய எஸ்வி சேகர்!

click me!