
இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னகத்தில் இதற்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ், இயக்குனர் கே. விஸ்வநாத், தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகிய வெகு சிலர் மட்டுமே இந்த உயரிய விருதை பெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்திற்கு இப்படியொரு உயரிய கவுரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து சோசியல் மீடியாக்கள் அனைத்திலும் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ரஜினியின் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா அவரை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், சூப்பர் ஸ்டாருக்கு தாதா சாகேப் பால்கே விருதுமூன்று தலைமுறைகளின் முடிசூடா மன்னனாகத் திகழும் எனதருமை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்துக்கு “தாதா சாகேப் பால்கே விருது” கிடைத்தமைக்கு உண்மையிலேயே பெருமை கொள்கிறேன்.கலைஞன் என்பவன் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறன் கொண்டவனாக இருப்பது முக்கியம்.
எத்தனை கால கட்டங்களைக் கடந்தாலும், தன்னை இன்னமும் உச்ச நாற்காலியில் இருத்தி வைக்க எத்துணை உழைப்பு வேண்டுமோ அத்தனை உழைப்பையும் கொடுத்து மக்களை தன் பக்கமே ஈர்த்து வைத்திருக்கும் இந்திய நாயகன், என் நண்பன், சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்திற்கு ஏற்புடைய விருதாகவே எண்ணி மகிழ்கிறேன். திரு. ரஜினிகாந்த் மேலும் எத்தனை உயரம் உண்டோ அத்தனை உயரத்தையும் அடைய அன்பின் வாழ்த்துகள். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். இந்திய சினிமாவின் இந்த உயரிய விருதை உரிய நேரத்தில் வழங்கிய மத்திய அரசிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.