’உனக்கான காலம் வெகு தூரம் இல்லை'...சீமானுக்கு சி.எம்.ஆசையைத் தூண்டும் பாரதிராஜாவின் பிறந்தநாள் வாழ்த்து...

Published : Nov 08, 2019, 12:26 PM IST
’உனக்கான காலம் வெகு தூரம் இல்லை'...சீமானுக்கு சி.எம்.ஆசையைத் தூண்டும் பாரதிராஜாவின் பிறந்தநாள் வாழ்த்து...

சுருக்கம்

இடையில் பட நிறுவனமும் துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் அவர் நடித்துள்ள இரு படங்கள் இன்று ஒரே தேதியில் ரிலீஸாகியுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து பேசும் ‘தவம்’ என்ற படத்தில் சமூக அநீதியை எதிர்த்துப்போராடும் வாத்தியாராகவும், ‘மிக மிக அவசரம்’படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.

இன்று தனது 53 வயதில் அடியெடுத்து வைக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ...உனக்கான காலம் வெகு தூரம் இல்லை...என்று இயக்குநர் பாரதிராஜா  பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வருங்கால தமிழக முதல்வர் ஆசையுடன் சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலில் களமாடிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 53 வயதில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அவருக்கு வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இடையில் பட நிறுவனமும் துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் அவர் நடித்துள்ள இரு படங்கள் இன்று ஒரே தேதியில் ரிலீஸாகியுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து பேசும் ‘தவம்’ என்ற படத்தில் சமூக அநீதியை எதிர்த்துப்போராடும் வாத்தியாராகவும், ‘மிக மிக அவசரம்’படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில்  முகநூல் தனது முன்னாள் மாணவரும், இந்நாள் அரசியல்வாதியுமான சீமானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா,...  உனக்கான காலம் வெகு தூரம் இல்லை. எதற்கும் ஆரம்பம், முடிவு என்று காலம் அமையும்.

தமிழ் இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்து வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது...

இன்னும் சில நாட்களில் தமிழ் இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு பிள்ளையே...என்று பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?