தியேட்டர்களை விட்டு பிகிலை ஊதித்தள்ளிய "கைதி"... 250-ல் தொடங்கி 350 ஆக அதிகரித்த ஸ்கிரீனிங்... செம குஷியில் தயாரிப்பாளர்...!

By Asianet TamilFirst Published Nov 8, 2019, 12:09 PM IST
Highlights

முதலில் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்பட்ட கைதி திரைப்படம். ரசிகர்களின் வரவேற்பை அடுத்து மேலும் 100 திரையரங்களில் வெளியிடப்பட்டது. ஆந்திரா, கேரளா,  கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தனது கெத்தை நிரூபித்தது கைதி, அங்கும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால் தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டது.

தியேட்டர்களை விட்டு பிகிலை ஊதித்தள்ளிய "கைதி"... 250-ல் தொடங்கி 350 ஆக அதிகரித்த ஸ்கிரீனிங்... செம குஷியில் தயாரிப்பாளர்...!

தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கு போட்டியாக கார்த்தியின் கைதி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் ரசிகர்களுக்கு க்ரைம் த்ரில்லர், கமர்சியல் என்ற இரண்டு சர்ப்ரைஸ் கிப்ட் கிடைத்தது. அனைத்து தியேட்டர்களிலும் முதல் வாரத்தில் பிகில் திரைப்படம் கெத்து காட்டி வந்த நிலையில், கைதி படத்தின் கதை ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்றது. ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கைதி திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினர். பாடல்,  ஹீரோயின், காதல் என்ற எந்த கமர்சியல் விஷயங்களும் இன்றி கதையை மட்டும் எடுக்கப்பட்ட கைதி திரைப்படத்தை, விஜய்யின் மாஸ் கமர்ஷியல் படமான பிகிலுடன் இறக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். 

லோகேஷ் கனகராஜின் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறை பிரபலங்களும் கொண்டாடினர். முதலில் 250 தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்பட்ட கைதி திரைப்படம். ரசிகர்களின் வரவேற்பை அடுத்து மேலும் 100 திரையரங்களில் வெளியிடப்பட்டது. ஆந்திரா, கேரளா,  கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தனது கெத்தை நிரூபித்தது கைதி, அங்கும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதால் தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டது. சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கைதி திரைப்படம், ரிலீஸான 12 நாட்களிலேயே 80 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. 

Started with 250 screens and continuing its 3rd week with 350! It keeps getting better!! 😍 Again... Thank you so much for your wonderful support!! 🙏🏼

— S.R.Prabhu (@prabhu_sr)

எந்த வித மாஸ், கமர்ஷியல் அம்சங்களையும் நம்பாமல் கைதி திரைப்படத்தின் கதையை நம்பி களத்தில் இறங்கினார் தயாரிப்பாளர் பிரபு. படம் வெளியாகி தற்போது 15 நாட்கள்  ஆன நிலையில், தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது தயாரிப்பாளரை குஷியாக்கியுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 250 ஸ்க்ரீனில் தொடங்கி 3வது வாரத்தில் 350 உடன் தொடர்கிறது!. மீண்டும் உங்களது ஆதரவுக்கு  மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார். நல்ல படம் கண்டிப்பா ஹிட் ஆகும்,  ஆனால் கொஞ்சம் டைம் எடுக்கும் என ரசிகர்கள் பலரும் தயாரிப்பாளர் பிரபுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 

click me!