இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பேத்தி மதிவதினி தன்னுடைய பள்ளிக்காக குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் திரையுலகில் கிராமத்து படங்களை இயக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் என்றால் அது பாரதிராஜா தான். எண்ணற்ற மண்வாசம் மிக்க படங்களை கொடுத்துள்ள இவர் தான் இன்றைய முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்கிற மகனும் உள்ளார். ஆரம்பத்தில் நடிகராக ஒரு சில படங்களில் தலை காட்டி வந்த மனோஜ், பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் மார்கழி திங்கள் திரைப்படம் ரிலீஸ் ஆனது. மனோஜ் பாரதிராஜா இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படி குடும்பத்தில் அடுத்தடுத்த இயக்குனர்கள் உருவாகி வரும் நிலையில், தற்போது புது வரவாக பாரதிராஜாவின் பேத்தியும், மனோஜின் மகளுமான மதிவதினி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... Varun: என் கனவு நிறைவேறி விட்டது! 'ஜோஷ்வா இமை போல் காக்க' படம் குறித்து மெய் சிலிர்த்து பேசிய வருண்!
தன்னை வைத்து குறும்படம் இயக்கிய தனது பேத்தி மதிவதனி மனோஜை வாழ்த்தினார் பாரதிராஜா pic.twitter.com/0zDZ4OGzN9
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தான் பயிலும் பள்ளிக்காக குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். அந்த குறும்படத்தில் பாரதிராஜா தான் நடித்துள்ளார். இளம் வயதிலேயே அசத்தும் பேத்தியின் அசாத்திய திறமையை பார்த்து வியந்துபோன பாரதிராஜா, அவரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, பொன்னாடை போர்த்தி சிறப்பாக டைரக்ஷன் செய்ததாக வாழ்த்தி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சொத்துக்களை வாங்கி குவிக்கும் ஷாருக்கான் மகள்.. இப்ப வாங்கிய நிலம் இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..