“சரி 2 வாரத்திற்கு என்ஜாய் பண்ணிக்கோங்க”... பாரதிராஜா எடுத்த அதிரடி முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Nov 10, 2020, 5:00 PM IST
Highlights

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. 

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் இன்று முதல் பல்வேறு இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விபிஎஃப் கட்டணம் காரணமாக முட்டிக்கொண்ட தயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்களால் புதிய படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்பது இறுதியானது. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான100% விபிஎப் கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாக க்யூப் அமைப்பு அறிவித்துள்ளது.  

இதையடுத்து சினிமா ரசிகர்களை குஷியாக்கும் வகையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான் VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓதாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPFஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. 

 

இதையும் படிங்க: நயன்தாராவிற்கு ‘நோ’ சொன்ன தளபதி விஜய்... முடியாதுன்னு ஒத்த வார்த்தையில் முடிச்சிட்டாராம்...!

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் கூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

 

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் பிக்பாஸ் ரைசா... நீச்சல் குளத்திற்குள் நின்றபடி கிக்கேற்றும் போஸ்கள்...!

அதே சமயம் VPF கட்டி படங்களை திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான நீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி! என தெரிவித்துள்ளார். 

click me!