
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல், விஜய் டிவிக்கு TRPயை எகிற செய்த சீரியல் ஆகும். நாயகி மாற்றத்திற்கு பிறகு தொடர் அதன் TRP ரேடிங் குறைந்து கொண்டிருக்கிறது.
கதைக்களம்:
கருப்பாக இருக்கும் பெண்ணிற்கும், டாக்டருக்கு காதல் மலர்கிறது, இருவரையும் பிரிக்க முயற்சிக்கும் வெண்பா. வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்ளும் பாரதியும், கண்ணம்மாவும் வெண்பாவின் சதி வேலைகளால் பிரிகிறார்கள். பாரதியின் சந்தேகத்தால் கண்ணம்மாவிற்கு பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று கண்ணம்மாவிடமும், ஒரு குழந்தை பாரதியிடமும் பிரிந்து வளர்கிறது.இதை மையமாக கொண்டு கதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
தற்போதைய கதைக்களம்:
தற்போது, இயக்குனர் இப்போது சின்ன குழந்தைகளை வைத்து கதையை நகர்த்தி கொண்டிருக்கிறார். பாரதி தான் தனது அப்பா என்ற உண்மையை அறிந்துகொண்ட லட்சுமி அவருடனேயே இருக்க ஆசைப்படும் அவருடனும் இருக்க பல வேலை செய்திருக்கிறார். அடுத்து கதையில் என்ன ட்விஸ்ட் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
நிஜத்திலும், வில்லியாக பார்க்கும் நெட்டிசன்கள்:
பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவை நிஜயத்திலும் பலர் வில்லியாகவே தான் பார்த்து வருகின்றனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, பரீனா கர்ப்பமான நிலையிலும், குழந்தை பிறந்த சில மாதங்கள் வரையிலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். கர்ப்பமாக இருந்த போது நீருக்கடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் வைரலானது. இதையடுத்து. இவர் மீது சமூக வலைதளத்தில் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் டெலிஅவார்ட்ஸ் விருது விழா:
பாரதி கண்ணம்மா தொடரில், இவரது கதாபாத்திரத்தால் இவரை திட்டி தீர்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லியாக மிரட்டி வருகிறார். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை கலைஞர்களுக்கான விஜய் டெலிஅவார்ட்ஸ் விருது விழா விரைவில் நடக்க இருக்கிறது. அதன் பகுதியாக விஜய்யின் தானை தலைவி என்ற பெயரில் நாயகிகள் இடம்பெற ஒரு ஷோ நடந்துள்ளது.
மேடையில் கண்ணீர் விட்ட பரீனா:
அதில் பாரதி கண்ணம்மா தொடர் பகழ் பரீனா பேசும்போது, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நிறைய மோசமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. அதையும் தாண்டி நான் கர்ப்பமாக இருந்த வேலையில் சீரியலில் நடித்த போது என்னுடைய குழந்தையையும் சேர்த்து நெட்டிசன்கள் திட்டினார்கள் என கண்ணீருடன் சோகமாக பேசியுள்ளார். இதனை பார்த்து அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.