'கொட்டுக்காளி' படத்திற்கு சர்வதேச அரங்கில் குவிந்த பாராட்டு! மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ!

Published : Feb 28, 2024, 07:27 PM ISTUpdated : Feb 28, 2024, 07:32 PM IST
'கொட்டுக்காளி' படத்திற்கு சர்வதேச அரங்கில் குவிந்த பாராட்டு! மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ!

சுருக்கம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடிக்கும், 'கொட்டுக்காளி' திரைப்படம் சர்வேதேச அரங்கில் தற்போது பாராட்டுகளை குவித்துள்ள தகவலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.  

'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், காமெடி நடிகர் சூரி 'விசாரணை' படத்தை தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க கமிட் ஆன திரைப்படம் 'கொட்டுக்காளி'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த டீசர் ஒன்று கடந்த ஆண்டு வெளியான போதே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. 

இதை தெடர்ந்து, தற்போது இந்த படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்து... ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படத்தை படக்குழு பல்வேறு விருது விழாக்களில் திரையிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், பெர்லினாலே 2024 என்று அழைக்கப்படும் 74வது ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழா கடந்த பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியின் நடைபெற்றது. இதில் கென்ய-மெக்சிகன் நடிகை லூபிடா நியோங்கோ ஆகியோர் ஜூரி தலைவராக உள்ளனர்.

பாடி டபுள் இல்லாமல் நடித்த வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது! கெளதம் மேனன் புகழாரம்!

இந்த சர்வதேச திரைப்பட விழாவில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. குறிப்பாக மலையாள திரைப்படங்களான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா, ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆனா பெல் நடிப்பை பலர் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.

No மேக்கப் லுக்! சிங்கிள் ப்ரீட் சேலையில்... ரசிகர்கள் மனதை புன்னகையால் கொள்ளைகொள்ளும் ஹன்சிகா போட்டோஸ்!

கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி என சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது... பெர்லினாலே
, மற்றும் நம்பமுடியாத சில பதில் நம் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை விட்டுச் சென்றது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ