
பீஸ்ட் திரைப்படம் வெளியான சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கு திரையினை கிழித்த ரசிகர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பீஸ்ட் திரைப்படம்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகாலை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரைப்படத்தை பார்க்க குவிந்ததோடு அங்கு ஒலித்த பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர். அதிகாலை காட்சிக்கு திரையரங்கிற்கு முன்பு குவிந்த பல பேரிடம் படத்தை பார்க்க உரிய டிக்கெட் இல்லை என்றாலும் காட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடன் திரையரங்கில் கூட்டம் அத்துமீறி நுழைந்ததால் திரையரங்க பணியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
கண்ணாடி உடைப்பு
அதிகாலை காட்சிக்கு திரையரங்கிற்கு முன்பு குவிந்த பல பேரிடம் படத்தை பார்க்க உரிய டிக்கெட் இல்லை என்றாலும் காட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடன் திரையரங்கில் கூட்டம் அத்துமீறி நுழைந்ததால் திரையரங்க பணியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒருகட்டத்தில் உரிய டிக்கெட் உடன் வந்த ரசிகர்கள் திரையரங்கிற்கு இடமில்லாமல் தவிக்க பலரும் திரைப்படத்தை திரையரங்கிற்குள் நின்றுகொண்டு பார்க்கும் நிலைக்கு ஆளாகினர். இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் ரோகிணி திரையரங்கில் உள்ள கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
ஸ்கிரீன் கிழிப்பு
இதேபோல், பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் சேலம் பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் ரசிகர்கள் திரையை கிழித்தனர். அத்துடன் திரையரங்கு கண்ணாடிகளை உடைத்ததாலும் சலசலப்பு ஏற்பட்டது. எனினும் பல இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் ரசிகர்களே வழிநடத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.