வெளியானது பீஸ்ட்.. வேற லெவலில் ஆட்டம் பாட்டம், பாலாபிஷேகம்.. விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டம்..!

Published : Apr 13, 2022, 07:34 AM IST
 வெளியானது பீஸ்ட்..  வேற லெவலில் ஆட்டம் பாட்டம், பாலாபிஷேகம்.. விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டம்..!

சுருக்கம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கில் செண்டை மேள தாளம் முழங்க நடிகர் விஜய் படத்திற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

வெளியானது பீஸ்ட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகியுள்ளது.

விடிய விடிய கொண்டாட்டம்

தமிழகத்தின் பல இடங்களில், குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் அதிகாலை ஷோ 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை வரவேற்றனர். வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. 

பாலாபிஷேகம்

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  SBT சினிமாஸ் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்கு விதமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ரசிகர்கள் நடிகர் விஜய் திரைப்பட பாடல்களுக்கு இடைவிடாது தொடர்ந்து நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செண்டை மேள தாளம் முழங்க நடிகர் விஜய் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். அதேபோல், ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கில் பீஸ்ட் படம் வெளியீட்டை தொடர்ந்து DJ நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஏற்பாடு செய்து கொண்ட்டத்தில் ஈடுபட்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!