மூழ்கிய படகில் அமர்ந்திருந்த மோடி! அவரின் ரியாக்ஷன் பற்றி பேசி சிலிர்க்க வைத்த பியர் கிரில்ஸ்!

By manimegalai a  |  First Published Aug 20, 2019, 2:12 PM IST

டிஸ்கவரி தொலைக்காட்சியில், கடந்த 12 ஆம் தேதி ஒளிபரப்பான  'மேன் வெர்சஸ் வைல்ட்'  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.  உத்தரகாண்டின் ஜிம் கார்பெட் காட்டுக்குள் மோடியை அழைத்துச் சென்றார் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்.
 


டிஸ்கவரி தொலைக்காட்சியில், கடந்த 12 ஆம் தேதி ஒளிபரப்பான  'மேன் வெர்சஸ் வைல்ட்'  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.  உத்தரகாண்டின் ஜிம் கார்பெட் காட்டுக்குள் மோடியை அழைத்துச் சென்றார் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்.

இந்த நிகழ்ச்சி உலக அளவில் அதிக மக்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பியர் கிரில்ஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், மிகவும் ஆபத்தான தருணத்தை பிரதமர் மோடி எப்படி எதிர் கொண்டார் என்பதை விவரித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மோடி பயணித்த ஜிம் கார்பெட் பூங்காவில், மோசமான காலநிலை காரணமாக, சூழ்நிலையை எதிர்க்கொள்ள சற்று கடினமாகவே இருந்தது. அப்போது மோடி மிகவும் அமைதியாகவும், ஆபத்து குறித்து எந்த ஒரு பயமும் இல்லாமல் உற்சாகமாக மட்டுமே இருந்தார்.  

குறிப்பாக ஒரு படகில் மோடியும் நானும் பயணிக்க வேண்டியிருந்தது. அப்போது மோடி ஏறியபின் படகு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்தது. இதனால் மோடியை மட்டும் படகில் வைத்துக்கொண்டு அவரை தள்ளி கொண்டே கரையை அடைந்தேன். ஆனாலும் மோடி முழுவதுமாக நனைந்து விட்டார்.  அப்போது பெய்த கனமழையில் அவர் மிகவும் இன்முகத்துடன் இருந்தார்.  உலகத் தலைவரான மோடி நெருக்கடி சூழ்நிலையின் போதும் அதனை அமைதியாக எதிர் கொண்டதை பார்க்க முடிந்ததாக சொல்லி செல்கிறார் பியர் கிரில்ஸ்.

மேலும் காட்டுக்குள் சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறையை மோடி காட்டியதாகவும். அதனால் அவர் என்னுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள ஆர்வத்துடன் முன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதால் அவருடைய பாதுகாப்புக்கு நாங்களும் பொறுப்பு என்பதால் தங்களுடைய குழுவினர் கொஞ்சம் பதற்றமாகவே இருந்ததாகவும்,  ஆனால் தனது எளிமை அடக்கத்தால் தங்களை இயல்பாக்கி விட்டார் மோடி என கூறி சிலிர்க்க வைக்கிறார் பியர் கிரில்ஸ்.

click me!