அங்க தொட்டு.. இங்க தொட்டு... தளபதி தலையிலேயே கை வச்ச பயில்வான்! விக்கு மண்டைனு பங்கம் பண்ணும் - வீடியோ!

By manimegalai a  |  First Published May 27, 2023, 12:48 AM IST

தளபதி விஜய் விதவிதமான விக் வைத்து நடித்து வருவதாக கூறி பங்கம் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். 
 


தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். அது மட்டுமின்றி, சினிமா விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சையான விஷயங்களையே டார்கெட் செய்து பேசி வரும் இவர், அங்க தொட்டு, இங்க தொட்டு இப்போ தளபதி தலையிலையே கை வைத்துள்ளார்.

இதனால் கடுப்பான, தளபதியின் ஆருயிர் ரசிகர்கள்... பாரபச்சம் பார்க்காமல், பயில்வானை சமூக வலைத்தளத்தில் பிரிந்து மேய்ந்து வருகிறார்கள். குறிப்பாக பயில்வானின் இந்த பேச்சுக்கு சில பிரபலங்களும் பொங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிர்வாணமா நடிகை ரேகா நாயர் நடித்ததாக பேசி, சர்ச்சையில் சிக்கிய பயில்வானின் வயதை கூட கன்சிடர் பண்ணாத ரேகா நாயர், ஜாக்கில் வந்த இடத்தில் பயில்வானை பார்த்து விட்டு அடிக்க பாய்ந்தது பூகம்பமாக வெடித்த நிலையில், பின்னர் புஸுன்னு ஆகிவிட்டது.

Tap to resize

Latest Videos

பயில்வானுக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்... இஷ்டத்துக்கு பேசி வரும் இவர்... தற்போது விஜய் பற்றி என்ன பேசி இருக்கிறார் என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே... தயாரிப்பார் கே.ராஜனின் நடிகர்கள் சிலர், 50 ஆகியிரம் ரூபாய்க்கு விக்கு கேக்குறாங்க என சூசகமாக கூறியபோது அவர் விஜய்யை தான் டார்கெட் செய்து கூறுகிறார் என்கிற பேச்சு அடிபட்டது குறிபிடத்தக்கது.

 

click me!