தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென்னுக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மூலம், இயக்குனர் சுதிப்தோ சென் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார். இவர் இயக்கத்தில் மே 5 ஆம் தேதி வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரூ 15 முதல் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படத்தில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் வெளியான மூன்றே வாரத்தில், 200 கோடி வசூலித்துள்ளதாக, படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இப்படம் கேரளாவை சேர்ந்த இந்து மற்றும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள்... கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு அழைத்து போய் அவர்களை தீவிர வாத செயல்களில் ஈடுபடுத்தியதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது. முதலில் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாக, பலர் போர் கொடி தூக்கப்பட்ட நிலையில், பின்னர் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம்இல்லை , தீவிரவாதத்திற்கு எதிரான படம் என்பதையே படக்குழு வலியுறுத்தியது. இப்படத்திற்கு எதிராக, மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றம் இப்படத்திற்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது.
நயன்தாரா, உட்பட 7 டாப் ஹீரோயின்ஸ் பயந்து நடுங்கும் விஷயங்கள்!
இந்நிலையில் சுதிப்தோ சென் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக, பல்வேறு ஊர்களுக்கு ஓய்வில்லாம் சென்று வந்தார். இதனால் அவருடைய உடல்நிலைபாதிக்கப்பட்டது . இதை தொடர்ந்து இப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளான நிலையில், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது திடீர் என சுதிப்தோ சென், உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால், மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.