
நடிகை பாவனாவிற்கு அரங்கேறிய கொடுமை எதிர்த்து குரல் கொடுக்கும் விதமாக இன்று தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், குட்டி பத்மினி, லலிதா குமாரி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர், நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் ஆகியோர் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருப்பதால் இதில் பங்கேற்கமுடியவில்லை என கூறப்படுகிறது.
இதில் நடிகர் பொன்வண்ணன் பேசும் போது, நடிகை பாவனாவிற்கு நடந்த செயல் கண்டிக்க தக்கது என்றும், இந்த காலத்தில் நடிகைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார்.
மேலும் நடிகைகள் மட்டும் அல்லது பெண்கள் அனைவரும் இரவு 11 மணிக்கு மேல் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. என கூறினார். அதே போல் பெற்றவர்களும் இளம் பெண்கள் வெளியில் செல்லாமல் இருக்க தடை விதையுங்கள் என கூறியுள்ளார் . இதனை தானும் 2 பெண் குழந்தைகளுக்கு அப்பா என்கிற உணர்வோடு பத்திரிகையாளர்கள் முன் பொங்கி எழுந்து உருக்கமாக பேசினார் பொன்வண்ணன் .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.