மூன்று நாயகிகளுடன்... பரத் பெண் வேடத்தில் மிரட்டியுள்ள 'பொட்டு' ரிலீஸ் உறுதியானது..!

 
Published : Jan 12, 2018, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
மூன்று நாயகிகளுடன்... பரத் பெண் வேடத்தில் மிரட்டியுள்ள 'பொட்டு' ரிலீஸ் உறுதியானது..!

சுருக்கம்

barath acting transgender character

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு” இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி,  மன்சூர் அலிகான், ஆர்யன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான், இசை அம்ரித்... மருத்துவக் கல்லூரி பின்னணியில் படு பயங்கர ஹாரர் படமாக இந்தப் படம் உருவாகி உள்ளது.

'பொட்டு' படத்தில், நடிகர் பரத் பெண் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக நமீதா அமெரிக்கா சென்று ஒரு சில நாட்கள் கருமையாக இருக்க பிரத்யேகமாக மேக்கப் உபகரணம் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.  

இந்தப்  படம் ஏற்கனவே தமிழில் சென்சார் செய்யப்பட்டு U/ A  பெற்றது, தெலுங்கு சென்சாருக்காக காத்திருந்த பொட்டு நேற்று தெலுங்கில் சென்சார் செய்யப்பட்டு  U/ A சான்றிதழ் பெற்றுள்ளது. எனவே வருகிற பிப்ரவரி மாதம் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தெலுங்கில் NKR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!