
பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் முதல் முதலில் இயக்கி தயாரித்த திரைப்படம் நடிகர் ராமராஜன் நடித்த 'எங்க ஊரு பாட்டுக்காரன்' இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பானுப்ரியாவின் தங்கை சாந்திபிரியா.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும், இவர் ஒரு பரத நாட்டியக் கலைஞர் என்பதால் நடனத்தின் மீது கவனம் செலுத்தினார். பின் பாலிவுட் பட அதிபரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இவருடைய கணவர் சித்தார்த் திடீர் என மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
தற்போது இவருடைய இரு பிள்ளைகளுடன் மும்பையில் வசித்து வரும் இவர், தன் கணவர் தொடங்கிய ராஜ் கமல் ஸ்டூடியோவை நிர்வகித்து வருகிறார். ஆனால் அதிலும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மீண்டும் கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் ஏதேனும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் . இதனால் எப்படியும் பல வருடங்கள் கழித்து மீண்டும் இவரை திரையில் பார்க்கலாம் என்று நம்புகின்றனர் ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.