#Breaking உச்சக்கட்ட பதற்றத்தில் பெங்களூர்… பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகளை உடனே மூட உத்தரவு!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 3:26 PM IST
Highlights

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து பெங்களூரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகளையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னட சினிமா உலகின் உச்சபட்ச ஸ்டார்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், அப்பு என்று செல்ல பெயர்களில் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் பல ஹிட் படங்களில் நடித்தவர்.   இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் இன்று உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இயன்றளவுக்கு முயற்சி செய்கிறோம். புனித்தின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் விக்ரம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் மரணமடைந்தார்.  

இதை அடுத்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னணி நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  புனித் மரணமடைந்த தகவல் அறிந்து மருத்துவமனை முன்பு புனித் ரசிகர்கள் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ரசிகர்களை தடுக்க மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், புனித் ராஜ் குமாரின் வீட்டிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் பெங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை உடனே மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  

click me!