சண்டை,சச்சரவுகள் இல்லாமல் நடந்த நடன இயக்குநர் சங்கத் தேர்தல்

Published : Jul 15, 2019, 10:35 AM ISTUpdated : Jul 15, 2019, 10:45 AM IST
சண்டை,சச்சரவுகள் இல்லாமல் நடந்த நடன இயக்குநர் சங்கத் தேர்தல்

சுருக்கம்

நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் சங்க தேர்தலில் தலைவராக'ஒரு குப்பைக்கதை’ பட ஹீரோவும் தேசிய விருதுபெற்றவருமான  தினேஷ் மாஸ்டர் 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சண்டை, சச்சரவுகள், கோர்ட் வழக்குகள் இன்றி இத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் சங்க தேர்தலில் தலைவராக'ஒரு குப்பைக்கதை’ பட ஹீரோவும் தேசிய விருதுபெற்றவருமான  தினேஷ் மாஸ்டர் 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சண்டை, சச்சரவுகள், கோர்ட் வழக்குகள் இன்றி இத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று மிக அமைதியான முறையில் நடந்தது. சென்னை தியாகராயநகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், இரண்டு இணை செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ் மற்றும் தினேஷ் போட்டியிட்டனர்.துணை தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் லலிதா ஷோபி மற்றும் சுஜாதா போட்டியிட்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் வாக்களித்தனர். 

இந்நிலையில் நடன இயக்குனர் சங்க தேர்தலில் தலைவராக தினேஷ் மாஸ்டர் 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  மொத்தம் 322 வாக்குகள் பெற்று தினேஷ் வெற்றிபெற்றார். ‘ஒரு குப்பைக்கதை’என்ற படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகி வெற்றி பெற்றவரான தினேஷ் தான் நடன இயக்கம் செய்த சில முக்கியமான படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’படத்துக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!