
தமிழ் சினிமாவில் ஒரு நடிகை, கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் என்றால் அது நடிகை குஷ்பு தான். 80 பது மற்றும் 90 களில், ரஜனிகாந்த், கமல், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.
இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்ட பிறகு, படிப்படியாக திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2011 ஆம் ஆண்டு இவர் இளைஞன் என்கிற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின் தமிழில் அவர் கணவர் இயக்கத்தில் வெளியான சில படங்களில் சிறப்பு வேடத்தில் தலைகாட்டினார். மேலும் முழு நேர சீரியல் நடிகையாகவும், அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வரலாமா? வேண்டாமா ? என ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தினார். இதுகுறித்து அவர் போட்ட பதிவில், “தோழர்களே... உங்கள் ஆலோசனை எனக்கு தேவை. மீண்டும் சினிமாவில் நான் நடிக்கட்டுமா ?. கூட்டத்தில் காணாமல் போக விரும்பவில்லை. சுவாரஸ்சியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கலாம் என நினைக்கிறேன். எனது மூத்த மகள் கல்லூரிக்கு செல்கிறாள். இப்போது நேரமிருக்கிறது,” எனக் கூறியிருந்தார். அதற்கு பலரும் அவர்களது ஆலோசனைகளைப் பதிவிட்டனர். இது சம்பந்தமாக அவர் நடத்திய வாக்கெடுப்பில், 79 சதவீதம் பேர், மீண்டும் இவர் நடிக்க வர வேண்டும் என்றும், வேண்டாமென 21 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.
இந்த பரபரப்பு ரிசல்டில் அடிப்படையில், அதிகப்படியாக ரசிகர்கள் நடிக்க வரவேண்டும் என கூறியதால் இனி, கதைகளைக் கேட்க ஆரம்பிப்பேன். ஏற்கெனவே சொன்னது போல, கூட்டத்தில் காணாமல் போக விரும்பவில்லை. அர்த்தமுள்ள, தரமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்,” எனத் தெரிவித்துள்ளார் குஷ்பு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.